MENU
 
 
  • சிக்கன் மலாய் டிக்கா

    1 vote

    Ingredients

    • 500 கிராம் போன்லெஸ் சிக்கன்
    • ¾ கெட்டி தயிர்
    • ½ கப் ஃப்ரெஷ் க்ரீம்
    • 1 மேஜைக்கரண்டி சோள மாவு
    • 8 to 10 பாதாம் பருப்பு
    • 3 பல் பூண்டு
    • 1 துண்டு இஞ்சி
    • 1 எலுமிச்சம் பழம்
    • 1 பச்சை மிளகாய்
    • 2 மேஜைக்கரண்டி கரம் மசாலா
    • 2 மேஜைக்கரண்டி சாட் மசாலா
    • 1 மேஜைக்கரண்டி கசூரி மேத்தி
    • ¼ மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள்
    • ¼ மேஜைக்கரண்டி வெள்ளை மிளகு தூள்
    • தேவையான அளவு எண்ணெய்
    • தேவையான அளவு நெய்
    • தேவையான அளவு உப்பு
    • சிறிதளவு கொத்தமல்லி

    Directions

    சிக்கன் மலாய் டிக்கா இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு அசைவ உணவு. இவை பெரும்பாலும் இந்தியாவில் இருக்கும் அனைத்து பிரபலமான ரெஸ்டாரன்ட்கள் மற்றும் உணவகங்களின் மெனுக்களில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும். இதற்கு காரணம் அசைவ உணவு பிரியர்கள் மத்தியில் சிக்கன் மலாய் டிக்காவிற்கு இருக்கும் அதீத வரவேற்பு தான். பல ரெஸ்டாரன்டுகள் அவர்களின் வாடிக்கையாளர்களின் பிரத்தியேக அனுபவத்திற்காக இன்னும் ஒரு படி மேலே சென்று சிக்கன் துண்டுகளை மசாலாவில் ஊற வைத்து skewer யில் சொருகி சுட்டு சாப்பிடுவதற்கு தயாரான நிலையில் தங்கள் வாடிக்கையாளர்களிடமே கொடுத்து விடுகிறார்கள். ரெஸ்டாரன்டில் வாடிக்கையாளர்களே சிக்கனை சுட்டு சாப்பிடுவதற்கு பல வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை நம்மால் காண முடியும். சிக்கன் மலாய் டிக்காவின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை வெகு சுலபமாக நாம் வீட்டிலேயே செய்து விடலாம். அது மட்டுமின்றி மற்ற சிக்கன் உணவுகளை போல இவை செய்வதற்கும் அதிக நேரம் எடுத்து கொள்ளாது. மேலும் சிக்கன் மலாய் டிக்கா ஒரு வித்தியாசமான முறையில் சமைக்கப்பட்டு பரிமாறப்படும் உணவு என்பதால் வீட்டில் உள்ளவர்களும் இதை மிகவும் விரும்பி உண்பார்கள். இப்பொழுது கீழே சிக்கன் மலாய் டிக்கா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம். 0 from 0 votes சிக்கன் மலாய் டிக்கா ரெசிபி சிக்கன் மலாய் டிக்கா ஒரு வித்தியாசமான முறையில் சமைக்கப்பட்டுபரிமாறப்படும் உணவு என்பதால் வீட்டில் உள்ளவர்களும் இதை மிகவும் விரும்பிஉண்பார்கள். Prep Time20 minsCook Time20 minsTotal Time40 mins Course: Appetizer, SnackCuisine: North IndianKeyword: Chicken Malai Tikka சிக்கன் மலாய் டிக்கா செய்ய தேவையான பொருட்கள் 500 கிராம் போன்லெஸ் சிக்கன்¾ கெட்டி தயிர்½ கப் ஃப்ரெஷ் க்ரீம்1 மேஜைக்கரண்டி சோள மாவு8 to 10 பாதாம் பருப்பு3 பல் பூண்டு1 துண்டு இஞ்சி1 எலுமிச்சம் பழம்1 பச்சை மிளகாய்2 மேஜைக்கரண்டி கரம் மசாலா2 மேஜைக்கரண்டி சாட் மசாலா1 மேஜைக்கரண்டி கசூரி மேத்தி¼ மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள்¼ மேஜைக்கரண்டி வெள்ளை மிளகு தூள்தேவையான அளவு எண்ணெய்தேவையான அளவு நெய்தேவையான அளவு உப்புசிறிதளவு கொத்தமல்லி சிக்கன் மலாய் டிக்கா செய்முறை முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு தட்டில் வைத்து பின்பு இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி, மற்றும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.இப்பொழுது ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் பாதாமை போட்டு சுமார் 20 லிருந்து 25 நிமிடம் வரை அதை ஊற விடவும்.அடுத்து நாம் சுத்தம் செய்து கழுவி வைத்திருக்கும் சிக்கனை ஒரு bowl ல் போட்டு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், கருப்பு மிளகு தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 10 லிருந்து 20 நிமிடம் வரை ஊற விடவும்.பின்பு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் ஊற வைத்திருக்கும் பாதாமை போட்டு அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.பிறகு அதில் பச்சை மிளகாயை நறுக்கி போட்டு அதையும் நன்கு அரைத்து பேஸ்ட் ஆக்கி ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.இப்பொழுது ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் பாதாம் பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட், தயிர், ஃப்ரெஷ் கிரீம், கரம் மசாலா, கசூரி மேத்தி, வெள்ளை மிளகு தூள், நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி, மற்றும் தேவையான அளவு உப்பை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.பின்னர் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.அடுத்து அதில் நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை போட்டு அது நன்கு மசாலாவோடு சேருமாறு அதை கிளறி விட்டு சுமார் 5 லிருந்து 10 நிமிடம் வரை ஊற விடவும்.10 நிமிடத்திற்கு பிறகு ஒரு iron skewer ரை எடுத்து அதில் இந்த சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக சொருகி வைத்து கொள்ளவும்.பின்பு இவ்வாறு மற்ற iron skewer யின் அளவிற்கேற்ப சிக்கன் துண்டுகளை சொருகி அதை ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.Iron skewer க்கு பதிலாக wooden skewer ரை பயன்படுத்துவதாக இருந்தால் அதை பயன்படுத்துவதற்கு முன் சுமார் அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைத்து எடுத்து கொள்ளவும்.இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் சிக்கன் துண்டுகளை சொருகி வைத்திருக்கும் iron skewer ரை எடுத்து pan ன் அளவிற்கேற்ப அதில் வைத்து கொள்ளவும்.Skewer ரை தொடர்ச்சியாக திருப்பி விட்டு கொண்டே இருக்க வேண்டும் அப்பொழுது தான் சிக்கன் துண்டுகள் அனைத்து புறமும் சமமாக வெந்து இருக்கும்.இதை அவனில் செய்வதாக இருந்தால் அவனில் சுமார் 450 டிகிரி பாரன்ஹீட்க்கு pre heat செய்து இந்த சிக்கன் துண்டுகளோடு இருக்கும் Skewer களை ஒரு தட்டில் வைத்து அதை அவனில் வைத்து சுமார் 10 நிமிடம் வரை வேக விடவும்.10 நிமிடத்திற்கு பிறகு அவனில் இருந்து அந்த தட்டை கவனமாக எடுத்து Skewer ரை திருப்பி வைத்து மீண்டும் அதே அவனில் வைத்து சுமார் 12 லிருந்து 15 நிமிடம் வரை அதை வேக விட்டு வெளியே எடுக்கவும்.பின்பு இதை ஒரு தட்டில் வைத்து அதில் நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறை ஊற்றி பின்பு அதன் மீது ஃப்ரெஷ் கிரீம்மை ஊற்றி, அதனுடன் கேரட், வெங்காயம், மற்றும் வெள்ளரிக்காய் துண்டுகளை நறுக்கி வைத்து அதை சுட சுட பரிமாறவும்.இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சிக்கன் மலாய் டிக்கா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள். Share this:Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on Pinterest (Opens in new window) You might also like

    Leave a review or comment