MENU
 
 
  • சிக்கன் ஷவர்மா

    1 vote

    Ingredients

    • 500 கிராம் போன்லெஸ் சிக்கன்
    • ½ கப் கேரட்
    • ½ கப் வெள்ளரிக்காய்
    • ½ கப் பச்சை குடை மிளகாய்
    • ½ கப் lettuce
    • 1 பெரிய வெங்காயம்
    • 3 கப் மைதா மாவு
    • 1 கப் வினிகர்
    • ½ கப் வெஜிடபிள் எண்ணெய்
    • 1 முட்டை
    • 25 கிராம் dry yeast
    • 2 மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு
    • ¼ மேஜைக்கரண்டி Dijon Mustard
    • ½ எலுமிச்சம் பழம்
    • 3 மேஜைக்கரண்டி தயிர்
    • 1 மேஜைக்கரண்டி சோயா சாஸ்
    • 2 மேஜைக்கரண்டி ரெட் சில்லி சாஸ்
    • தேவையான அளவு வெள்ளை மிளகு தூள்
    • தேவையான அளவு கருப்பு மிளகு தூள்
    • தேவையான அளவு உப்பு
    • தேவையான அளவு சர்க்கரை
    • தேவையான அளவு எண்ணெய்

    Directions

    ஷவர்மா உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு. குறிப்பாக இளம் தலைமுறையினர் மற்றும் உணவு பிரியர்கள் மத்தியில் இதற்கு ஒரு தனி வரவேற்பு உண்டு. ஷவர்மாக்களில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக சிக்கன் ஷவர்மா, பீஃப் ஷவர்மா, போர்க் ஷவர்மா, மற்றும் வெஜிடபிள் ஷவர்மா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது சிக்கன் ஷவர்மா. பொதுவாக நாம் மாலை நேரங்களில் பல விதமான சிற்றுண்டிகளை செய்து சுவைத்திருப்போம். அதில் பல சிற்றுண்டிகள் நமக்கு அலுத்தே போயிருக்கலாம். இதை நாம் வழக்கமாக செய்து உண்ணும் மாலை நேர சிற்றுண்டிகளுக்கு ஒரு அருமையான மாற்று. இதை நீங்கள் ஒரு முறை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் கட்டாயம் அவர்கள் இதை மீண்டும் மீண்டும் செய்து தர அடம் பிடிப்பது உறுதி. ஏனெனில் இதன் சுவை அவ்வளவு அசத்தலாக இருக்கும். இப்பொழுது கீழே சிக்கன் ஷவர்மா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம். 0 from 0 votes சிக்கன் ஷவர்மா ரெசிபி குழந்தைகளுக்குசெய்து கொடுத்தால் கட்டாயம் அவர்கள் இதை மீண்டும் மீண்டும் செய்து தர அடம் பிடிப்பதுஉறுதி. Prep Time20 minsCook Time20 minsTotal Time40 mins Course: Main Course, SnackCuisine: Tamil, Tamil NaduKeyword: chicken shawarma சிக்கன் ஷவர்மா செய்ய தேவையான பொருட்கள் 500 கிராம் போன்லெஸ் சிக்கன்½ கப் கேரட்½ கப் வெள்ளரிக்காய்½ கப் பச்சை குடை மிளகாய்½ கப் lettuce1 பெரிய வெங்காயம்3 கப் மைதா மாவு1 கப் வினிகர்½ கப் வெஜிடபிள் எண்ணெய்1 முட்டை25 கிராம் dry yeast2 மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு¼ மேஜைக்கரண்டி Dijon Mustard½ எலுமிச்சம் பழம்3 மேஜைக்கரண்டி தயிர்1 மேஜைக்கரண்டி சோயா சாஸ்2 மேஜைக்கரண்டி ரெட் சில்லி சாஸ்தேவையான அளவு வெள்ளை மிளகு தூள்தேவையான அளவு கருப்பு மிளகு தூள்தேவையான அளவு உப்புதேவையான அளவு சர்க்கரைதேவையான அளவு எண்ணெய் சிக்கன் ஷவர்மா செய்முறை முதலில் வெங்காயம், வெள்ளரிக்காய், கேரட், குடை மிளகாய், lettuce, மற்றும் பூண்டை நறுக்கி எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்த பின்பு சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை பொடி பொடியாக நறுக்கி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் தண்ணீர், ஒரு கப் வினிகர், 2 மேஜைக்கரண்டி அளவு சர்க்கரை, மற்றும் 2 மேஜைக்கரண்டி அளவு உப்பு சேர்த்து சர்க்கரை நன்கு கரையும் வரை அதை ஒரு கரண்டியின் மூலம் கிண்டி கொண்டே இருக்கவும்.சர்க்கரை நன்கு கரைந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதை கீழே இறக்கி வைத்து கொள்ளவும்.பின்பு ஒரு bowl லை எடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், கேரட், வெள்ளரிக்காய், மற்றும் குடை மிளகாயை போட்டு அதில் நாம் செய்து வைத்திருக்கும் வினிகர் தண்ணீரை ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அதை ஊற விடவும்.இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி அதை சுட வைக்கவும். (தண்ணீர் மிதமான அளவு சூடானதும் அடுப்பை அணைத்து விடவும்.)பின்னர் ஒரு bowl லை எடுத்து அதில் dry yeast டை போட்டு அதனுடன் நாம் சுட வைத்த தண்ணீரை ஊற்றி அதை சுமார் 3 லிருந்து 4 நிமிடம் வரை அப்படியே வைக்கவும்.அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் மைதா மாவு கொட்டி அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி அளவு உப்பு மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு சர்க்கரையை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.பிறகு அதில் நாம் dry yeast டை போட்டு வைத்திருக்கும் தண்ணீரை அதில் ஊற்றி அதை சுமார் 6 லிருந்து 8 நிமிடம் வரை நன்கு பிசையவும்.8 நிமிடத்திற்கு பிறகு அதை எடுத்து ஒரு மேஜையில் வைத்து அதை சுமார் 6 லிருந்து 8 நிமிடம் வரை நன்கு இழுத்து இழுத்து பிசைந்து விடவும்.8 நிமிடத்திற்கு பிறகு மாவின் மீது நன்கு எண்ணெய் தடவி பாத்திரத்தை ஒரு துணியின் மூலம் மூடி அதை சுமார் 1 லிருந்து ஒன்றரை மணி நேரம் வரை ஊற விடவும்.ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு மாவை எடுத்து அதை மீண்டும் சுமார் ஒரு நிமிடத்திற்கு நன்கு பிசைந்து அதை சுமார் 10 உருண்டைகளாக பிரித்து அதன் மீது மீண்டும் எண்ணெய்யை தடவி அதை சுமார் 30 லிருந்து 45 நிமிடம் வரை ஊற விடவும்.45 நிமிடத்திற்கு பிறகு ஒரு சப்பாத்தி கல்லை எடுத்து அதில் சிறிது மைதா மாவை தூவி அதில் நாம் ஊற வைத்திருக்கும் மைதா மாவு உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து அதை சப்பாத்தி கல்லில் வைத்து சப்பாத்திக்கு தேய்பதை விட சிறிது கனமாக தேய்த்து அதை ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அது சுட்டதும் அதில் நாம் தேய்த்து வைத்திருக்கும் ரொட்டியை அதில் போட்டு அது ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி போட்டு அது வெந்ததும் அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.இவ்வாறு மீதமுள்ள ரொட்டிகளையும் சுட்டு எடுத்து தட்டில் தயாராக வைத்து கொள்ளவும்.அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் வெஜிடபிள் எண்ணெய்யை ஊற்றி அதனுடன் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதை நன்கு அரைத்து கொள்ளவும்.பின்பு அதில் ஒரு மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு, தேவையான அளவு உப்பு, கருப்பு மிளகு தூளை, ஒரு மேஜைக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு, ஒரு மேஜைக்கரண்டி வினிகர், மற்றும் Dijon கடுகை போட்டு அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.இப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் சிக்கனை போட்டு அதில் ஒரு மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு, ஒரு மேஜைக்கரண்டி வெள்ளை மிளகு தூள், ஒரு மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விடவும்.பிறகு அதில் சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், தயிர், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி வினிகரை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 45 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை ஊற விடவும்.ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை எடுத்து பக்குவமாக போட்டு அதில் இருக்கும் தண்ணீர் நன்கு வற்றும் வரை அதை வேக விடவும்.தண்ணீர் நன்கு வற்றியதும் அடுப்பை அணைத்து விட்டு சிக்கனை எடுத்து கீழே வைத்து கொள்ளவும்.அடுத்து ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் வினிகரில் ஊற வைத்திருக்கும் காய்கறிகளை போட்டு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் lettuce மற்றும் நாம் செய்து வைத்திருக்கும் Mayonnaise சை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.அடுத்து நாம் சுட்டு வைத்திருக்கும் பிட்டா பிரட்டை எடுத்து அதில் Mayonnaise சை தடவி பின்பு அவரவர் விருப்பத்திற்கேற்ப Mayonnaise கலவை மற்றும் நாம் செய்து வைத்திருக்கும் சிக்கனை வைத்து அதை உருட்டி சுட சுட பரிமாறவும்.இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அட்டகாசமாக இருக்கும் சிக்கன் ஷவர்மா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.   Share this:Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on Pinterest (Opens in new window) You might also like

    Leave a review or comment